[X] Close

காங்கிரஸ் ஆட்சியின் போது இடைத்தரகர் மைக்கேலால் ரஃபேல் ஒப்பந்தம் தாமதமா?- காங். பதில் அளிக்க மோடி வலியுறுத்தல்


modi-vs-rahul

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:49 am
  • அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் மட்டும் ‘மைக்கெல்’ இடைத்தரகராக பணியாற்றவில்லை. வேறு ஒரு கம்பெனிக்காகவும் (ரஃபேல் விமானங்களுக்குப் பதில் யூரோபைட்டர் போர் விமானம் வாங்க) பேரம் பேசியிருக்கிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ரஃபேல் விவகாரத்தில் தற்போது சத்தம் போடும் காங்கிரஸ் தலைவர்கள், மைக்கேலுக்கும் அவர்களுக்கும் (சோனியா, ராகுல் காந்தி) என்ன தொடர்பு என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதுபோன்ற இடைத்தரகர்களிடம் இருந்து கமிஷன் பெற்றவர்கள், நாட்டின் காவலாளியை (மோடி) பயமுறுத்த முயற்சிக்கின்றனர்.

ஆனால், அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். ஏனெனில், இந்தக் காவலாளி உறங்குவதும் இல்லை, பயப்படுவதும் இல்லை. என் மீது அவர்கள் தரக்குறைவான வார்த்தைகளை மழை போல பொழியலாம். பொய்கள் சொல்லலாம். ஆனால், நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்கும் பணி பணி தொடரும்.

இவ்வாறு மோடி பேசினார்.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவருக்கு தற்போது பிரதமர் மோடி பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close