[X] Close

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது


parliament

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 06:27 am
  • அ+ அ-

அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய் யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா, மக்களவையில், நேற்று முன்தினம் நிறைவேறிய நிலை யில், மாநிலங்களவையிலும் நேற்று பெரும்பான்மை ஆதரவுடன் நிறை வேறியது.

உயர் சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடஒதுக் கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்நிலையில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த 7-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள் ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக் கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

இதன்படி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019-ஐ மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அமளிக்கு மத்தியில் தாக்கல்

இந்நிலையில், நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும் குடியுரிமை (திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட் டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட னர். இதனால் அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது, அமளிக்கு நடுவே, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், உயர் சாதி ஏழை களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்ட திருத்த) மசோதாவை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முந்தைய அரசுகள் ஏற்கெனவே கொண்டுவர முயன்றன. ஆனால், அரசியல் சாசன சட்டத்தில் அதற்கு இடம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் தடை விதித்தது. எனவே, இந்த மசோதா நிறைவேற ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

ஆனால் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயல்வதாக காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை மீண்டும் கூடியதும், இந்த மசோதா குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, “தமிழகத்தில் இட ஒதுக்கீடு முறையை கொண்டுவருவதற்கு முன்பு குழு அமைத்து அதன் ஆலோசனை அடிப்படை யில் செயல்படுத்தினோம். உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள். இதுகுறித்து ஏதாவது ஆய்வு செய்தீர்களா, எனவே இந்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

இந்தக் கோரிக்கைக்கு இந்திய கம் யூனிஸ்ட் (டி.ராஜா), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. இந்தக் கோரிக் கையை அவைத்தலைவர் ஏற்க மறுத்தார்.

இதனிடையே, மசோதாவை நிறை வேற்ற எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் விஜய் கோயல் குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா பேசும்போது, “காங்கிரஸ் கட்சி மசோதாவை ஆதரிக் கிறது. ஆனால் இதை கொண்டுவந்த விதம்தான் பிரச்சினையாக உள்ளது” என்றார்.

இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் மதுசூதன் மிஸ்திரி பேசும்போது, “கடைசி நேரத்தில் அவசர அவசரமாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன” என்றார்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கிட்டு பேசும்போது, “இந்த மசோதா தாமதமாக தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆனாலும், எப்போதும் இல்லை என்பதை விட காலம் கடந்தாவது நிறைவேற்றுவது நல்லதுதான். இதை ஆதரிப்பதாக இருந்தால் முழு மனதாக ஆதரியுங்கள். தேர்தலுக்கு முன்பாக அரசு மேலும் பல நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

மோடி அரசுக்கு வெற்றி

மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது வரலாற்று சிறப்பு மிக்கது. இது சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான மிக முக்கிய நடவடிக்கை ஆகும். இதன்மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பலன் கிடைக்கும். அவர் களது வாழ்க்கைத் தரம் உயரும். மாநிலங் களவையிலும் இந்த மசோதா நிறைவேறும் என நம்புகிறேன்” என்றார்.

இதற்கிடையில், மாநிலங்களவையில், காரசாரமான விவாதம் நேற்று இரவு வரை நீடித்தது. பின்னர் அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் நடத்திய வாக்கெடுப்பில் 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. 7 பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியுள்ள போதி லும், மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி யாகவே இது கருதப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close