[X] Close

சகோதர, சகோதரிகளே.. உங்கள் உரிமை பறிக்கப்படாது: வடகிழக்கு மக்களுக்கு மோடி ஆறுதல்


assure-you-pm-s-message-to-northeast-amid-citizenship-bill-protests

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jan, 2019 16:14 pm
  • அ+ அ-

குடியுரிமை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நேரத்தில் அதனை சமாளிக்கும் வகையில்  குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பறிக்கப்படாது என்று உறுதியளித்திருக்கிறார் பிரதமர் மோடி.

குடியுரிமை மசோதாவின்படி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருன்து 31, டிசம்பர் 2014-க்கு முன் இந்தியாவுக்குள் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மைப் பிரிவினருக்கு குடியுரிமைத் தகுதி வழங்கப்படும்.

இதனால் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். குடியுரிமை மதச்சார்புத் தன்மையுடன் வழங்கப்படுதல் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மத்திய அரசு இதில் பிடிவாதம் காட்டவே கூட்டணியில் இருந்த அசாம் கன்பரிஷத் பாஜகவுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரில் பிரதமர் மோடி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், "குடியுரிமை  மசோதாவை தாக்கல் செய்வதால் அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் உரிமை பாதிக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close