[X] Close

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: ராணுவத் தளபதி அறிவுரை


need-to-curb-social-media-to-combat-radicalisation-army-chief-bipin-rawat

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jan, 2019 15:31 pm
  • அ+ அ-

பிரிவினைவாதத்தை பரப்புவதற்கு முக்கிய தளமாக பயன்படுவதால், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பிரிவினைவாதத்தை பரப்புவதற்கு முக்கிய தளமாக பயன்படுவதால், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும். 

காஷ்மீரில்  மதம் குறித்து தவறான செய்திகளை பரப்புவதால் பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தவறான தகவல்கள், திரிக்கப்பட்ட தகவல்கள், பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால்தான், படித்த இளைஞர்கள் அதிகம் பேர் தீவிரவாத அமைப்பில் இணைகின்றனர். 

தீவிரவாதத்தை தனது கொள்கையாக வைத்திருக்கும் நாடு இருக்கும் வரை, இங்கு தீவிரவாதம் இருந்துகொண்டேதான் இருக்கும். 
தீவிரவாதம், புதிய வகையான போர் உத்தியாக மாறி இருக்கிறது. 

பலவீனமான நாடு ஒன்று, மற்ற நாடுகள் மீது அழுத்தத்தை கொடுக்க தீவிரவாதத்தைக் கொள்கையாக கொண்டிருக்கிறது. தீவிரவாதம் பல தலை அரக்கன்களை போல் வேகமாக பரவி வருகிறது" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close