[X] Close

நாடாளுமன்ற தேர்தல்: பிப் 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்?


budget-session-likely-from-jan-31

  • நெல்லை ஜெனா
  • Posted: 09 Jan, 2019 15:05 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அரசு பதவியேற்ற பிறகு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தற்போதைய அரசின் பதவிக்காலம் குறைந்த காலமே இருப்பதால் அடுத்த நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செலவினத்துக்காக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்ற பிறகு அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close