[X] Close

மெகா கூட்டணியில் இடம் பெறப்போவதில்லை: பிஜூ ஜனதா தளம்


bjd-will-not-be-part-of-maha-alliance-bjd

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jan, 2019 13:53 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் வலுவான கூட்டணி ஒன்றை உருவாக்க மகா கூட்டணிக்கான அச்சாரம் இடப்பட்டு வரும் வேளையில் அதில் அங்கம் வகிக்கப்போவதில்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறது ஒடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சி.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் அளித்த பேட்டியில், "பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடமிருந்து சம அளவில் விலகி நிற்போம் என்ற எங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று அவர் அளித்த பேட்டியில் மகா கூட்டணியில் இடம்பெறுவது குறித்து முடிவு செய்ய அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையில் இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தக் கூட்டணி அமைவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் திமுகவின் ஆதரவு இந்த கூட்டணிக்கு இருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close