[X] Close

இதயத்தை காணவில்லை!- காவல்நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர்


she-stole-my-heart-nagpur-man-reports-theft

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jan, 2019 12:25 pm
  • அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் விநோதமான புகாரைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
என் இதயத்தை ஒரு இளம் பெண் திருடிவிட்டால் என்று புகார் கொடுத்திருக்கிறார். போலீஸார் சற்று திகைத்துதான் போயிருக்கின்றனர்.

நாக்பூர் போலீஸ் கமிஷனர் பூஷன் குமார் உபாத்யாய் தலைமையில் கடந்த வாரம் திருடு போய் மீட்கப்பட்ட நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், "இன்று இந்த நிகழ்ச்சியில் திருடப்பட்ட நகைகளை நாங்கள் மீட்டுக் கொடுத்திருக்கிறோம். ஆனால், சில நேரம் எங்களுக்கு வரும் புகார்கள் விநோதமானவையாக உள்ளன. அவற்றை தீர்க்கவே முடியாது.

இப்படித்தான் நாக்பூர் காவல் நிலையத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் இளம் பெண் ஒருவர் தனது இதயத்தைத் திருடிவிட்டதாக புகார் கொடுத்திருக்கிறார்.

அவரிடம் காவலர்கள் பேசிப் புரியவைத்தனர். இந்திய சட்டத்தில் இப்படி ஒரு புகாரை ஏற்பதற்கான வழியே இல்லை" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close