[X] Close

மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளரானார் அப்சரா ரெட்டி; 133 ஆண்டு காங்கிரஸ் வரலாற்றில் முதல்முறையாக தேசிய நிர்வாகியான  திருநங்கை


apsara-reddy-appointed-as-national-level-office-bearer-in-congress

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 09 Jan, 2019 12:03 pm
  • அ+ அ-

மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளரானார் அப்சரா ரெட்டி; 133 ஆண்டு காங்கிரஸ் வரலாற்றில் முதல்முறையாக தேசிய நிர்வாகியான  திருநங்கை

காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவான மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் 133 ஆண்டு கால வரலாற்றில் திருநங்கை ஒருவர் தேசிய அளவில் நிர்வாகியாகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான அப்சரா ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் முன்னிலையில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

இதுகுறித்துப் பேசிய சுஷ்மிதா, ''அப்சராவின் உத்வேகமான ஆளுமை, கட்சியின் பெண்கள் பிரிவுக்கு மிகப்பெரிய சொத்து. காங்கிரஸ் குடும்பத்தில் அப்சராவை இணைத்ததற்கு, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

அப்சரா ரெட்டி இதுகுறித்துப் பேசும்போது, ''பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றம், சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான போராட்டம், பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக மகிளா காங்கிரஸுடன் இணைந்து  இந்தியா முழுவதும் செயல்படுவேன்'' என்றார். 

அப்சரா இதற்கு முன்னதாக பாஜக மற்றும் அதிமுகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close