[X] Close

ஜனநாயகம் துணிந்து போராடும்; நீதியே வெல்லும்!- ராகுல் காந்தி


some-justice-has-been-done-rahul-gandhi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jan, 2019 16:21 pm
  • அ+ அ-

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "சிபிஐ தலைவர் அலோக் வர்மா நள்ளிரவில் 1 மணியளவில் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ரஃபேல் ஊழல் விசாரணையை துவக்குவதற்கு ஆயத்தமான நிலையில் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இப்போது அவர் மீண்டும் சிபிஐ இயக்குநராக தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இனி நடப்பது என்னவென்று நாம் பார்ப்போம்" எனக் கூறினார்.

இதேபோல் தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டவிரோதமாக அலோக் வர்மாவை பணியில் இருந்து நீக்கியதன் மூலம் பிரதமர் மோடி அரசியல் சாசனத்தையும் இந்திய மக்களையும் அவமதித்துவிட்டார்.

இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகம் போராடும், நீதியே வெல்லும் என்பதை நிலைநிறுத்தியிருக்கிறது. இப்போது மோடி எங்கு சென்று மறைந்து கொள்வார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close