[X] Close

பாஜக முன்னாள் எம்எல்ஏ ஓடும் ரயிலில் சுட்டுக்கொலை


gujarat-bjp-leader-53-shot-dead-on-moving-train

  • நெல்லை ஜெனா
  • Posted: 08 Jan, 2019 13:16 pm
  • அ+ அ-

அகமதாபாத்

குஜராத் மாநிலத்தில் பாஜகவச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் ஓடும் ரயிலில் மர்ப நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அபடஸா தொகுதி முன்னாள் எம்எல்ஏ  ஜெயந்தி பன்ஸாலி. பாஜக மூத்த தலைவரான அவர் அகமதாபாத்தில் இருந்து புஜ் நகருக்கு ரயிலில் நேற்று சென்று கொண்டு இருந்தார். சாய்ஜ்  நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் அவர் பயணம் செய்த நிலையில், கட்டாரியா மற்றும் சுர்பாரி நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது ஜெயந்தி பயணம் செய்த  முதல் வகுப்பு பெட்டிக்குள் அதிரடியாக நுழைந்த மர்மநபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஜெயந்தி பன்ஸாலியின் தலை மற்றும் கண் பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த குண்டு காயம் பட்ட அவர் ஓடும் ரயிலிலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் அடுத்து வந்த ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி பன்ஸாலி உடலை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னாள் எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற நபரை குஜராத் போலீஸார் தேடி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close