[X] Close

சிதம்பரத்திடம் 2-வது முறை அமலாக்க துறை விசாரணை


chidambaram

ப.சிதம்பரம்

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 09:27 am
  • அ+ அ-

கடந்த 2007-ல் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெற, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) அனுமதி வழங்கியது. இதற்கான அனுமதியை ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக வழங்கியதாகவும் இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர் நீதிமன்றம்ஜனவரி 15 வரை நீட்டித்துள்ளது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் கடந்த டிசம்பர் 19-ம் தேதி விசாரணை நடத்தினர். இந்நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் நேற்று காலை அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை இதுவரை நடத்திய விசாரணையில், எப்ஐபிபி அனுமதியில் தாமதத்தை தவிர்க்க ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் சந்தித்தது தெரியவந்துள்ளது.

என்றாலும் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு, தொடர்புடைய பிற நிறுவனங்கள் மூலம் பணம் சென்றதாக அமலாக்கத் துறை கூறுகிறது. சிதம்பரம், கார்த்தி மீது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர, ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கும் உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close