[X] Close

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிக்கை


mayavati-press-release

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 07:18 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் சேரலாம் எனத் தெரிகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் உ.பி.யில் சட்ட விரோத சுரங்கப் பிரச்சினை தொடர் பாக சமாஜ்வாதி தலைவர் அகி லேஷ் யாதவை சிபிஐ விசாரிக்க லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யை ஆளும் பாஜகவின் உத்தரவின்பேரில்தான் அகி லேஷை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கவுள்ளதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அகி லேஷ் யாதவுடன் தொலைபேசியில் பேசி, தனது கட்சியின் முழு ஆதரவு சமாஜ்வாதிக்குத்தான் என்று உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாயாவதி விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: சிபிஐ அதிகாரிகள் சோதனை, விசாரணை ஆகியவை, பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் என்பது பாஜகவுக்கு புதிதல்ல. சமாஜ்வாதி கட்சியின் மீது அவப்பெயர் ஏற் படுத்தவே இதுபோன்ற அரசியல் சதிவேலைகளை பாஜக செய்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அவர்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அகிலேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதுபோன்ற அரசியல் நாடகங்களுக்கு நடுங்க வேண் டாம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் பேசும்போது, “உ.பி.யைச் சேரந்த அமைச்சர் ஒருவர் டெல்லி யில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கிறார். அகிலேஷ் மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோருகிறோம் என்று கூறுகிறார். இதன்மூலம் நாம் என்ன முடிவுக்கு வர முடியும்? பாஜகவின் உத்தரவின்பேரில்தான் இது நடக்கிறது என்பது அனைவ ருக்கும் தெரிந்துவிட்டது. இது அவர்களுக்கே பாதகமாக முடியப் போகிறது. உ.பி.யில் இனிமேல் பாஜகவின் மாயாஜாலம் எடுப டாது. பிரதமர் மோடி, தனது வார ணாசி தொகுதியை விட்டு வேறு இடத்தில் போட்டியிடச் செல்ல வேண்டியதுதான்” என்றார்.

பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close