[X] Close

காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேருகிறார் ராஜ்தாக்கரே


raj-thackrey

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 07:16 am
  • அ+ அ-

உ.பி.க்கு அடுத்து அதிக மக்களவை தொகுதிகளை (48) கொண்டது மகாராஷ்டிரா மாநிலம். இதன் முக்கிய கட்சியான சிவசேனாவிலிருந்து வெளியேறிய தலைவரான ராஜ்தாக்கரே புதிதாக துவங்கிய கட்சி எம்என்எஸ். இக்கட்சிக்கு நகர பகுதிகளில் மட்டும் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. எனினும், கடந்த 2014 மக்களவை தேர்தலில் நகர்ப்புறங்களில் மட்டும் தனித்து போட்டியிட்ட எம்என்எஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை. ஆனால், போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதிகளிலும் சில ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. இந்த வாக்குகள் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் கிடைத்தால் பலன் கிடைக்கும் என சரத்பவார் கருதுகிறார். இதனால் ராஜ்தாக்கரேக்கு ஓரு தொகுதி ஒதுக்கி தம் கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறார்.

இந்நிலையில் ஜனவரி 27-ல் நடைபெறும் தன் மகன் அமித்தாக்கரே திருமணத்திற்கு அழைப்பிதழ் அளிக்க அரசியல் தலைவர்களை ராஜ்தாக்கரே சந்தித்து வருகிறார். இதற்காக சரத்பவாருடன் நடந்த 3 சந்திப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சரத்பவாரின் ஏற்பாட்டின்படி ராகுல் - ராஜ்தாக்கரேவின் சந்திப்பு டெல்லியில் நடைபெறவுள்ளது.

இது குறித்து 'தமிழ் இந்து' நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது,‘‘மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 20, சரத்பவாருக்கு 20 மீதி உள்ள 8 தொகுதிகள் ராஜு ஷெட்டி, டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே ராஜ்தாக்கரேக்கு தனது பங்கிலிருந்து சரத்பவார் தொகுதி ஒதுக்க வேண்டியிருக்கும்’’ எனத் தெரிவித்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close