[X] Close

ராமர் கோயிலும் சபரிமலையும்தான் உங்களுக்குப் பிரச்சினையா?- சாடும் அமர்த்தியா சென்


whether-to-build-rammandir-or-if-menstruating-women-can-enter-a-temple-should-it-be-a-central-issue

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 16:30 pm
  • அ+ அ-

ராமர் கோயிலை மீண்டும் கட்டுவதும் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும்தான் உங்களுக்கு பிரதான பிரச்சினையா என மத்திய அரசை சாடியிருக்கிறார் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்.

நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க கொள்கையை பிரம்மாண்ட தவறு என விமர்சித்தவர்.

இது போன்று பல்வேறு பொருளாதார அம்சங்களையும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மத்திய அரசு ராமர் கோயில் விவகாரத்திலும் சபரிமலை விவகாரத்திலும் கவனம் செலுத்துவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர், "மக்களவைத் தேர்தல் வரவிருக்கும். வேறு எந்த ஒரு நாடாக இருந்தாலும் தேர்தலில்தான் கவனம் செலுத்தும்.

ஆனால், வியக்கவைக்கும் வகையில் இங்கு மட்டுமே, ராமர் கோயிலை மீண்டும் கட்டுவதற்கும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இவைதான் மத்திய அரசின் பிரதான பிரச்சினைகளாக இருக்க வேண்டுமா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close