[X] Close

சம்பளத்தை உயர்த்துங்கள் ஊழல் குறையும்!- பிரதமருக்கு பாஜக எம்.பி. யோசனை


harish-dwivedi-urges-pm-to-hike-mps-salaries

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 16:11 pm
  • அ+ அ-

எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்துங்கள் ஊழல் குறைந்துவிடும் என்று பிரதமர் மோடிக்கு ஊழல் ஒழிப்பு யோசனை சொல்லியிருக்கிறார் பாஜக எம்.பி. ஹரிஷ் துவிவேதி.

உத்தரப் பிரதேச மாநில எம்.பி.யான இவர் பஸ்தி மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "மிகக் குறைந்த சம்பளத்தை வைத்துக் கொண்டும் நானும் எனது சகாக்கள் எங்களது தொகுதியை பராமரிக்க மிகவும் திணறுகிறோம்.

ஒவ்வொரு எம்.பி.,க்கும் அவரது தொகுதியப் பேண குறைந்தது 12 ஊழியர்களாவது தேவைப்படுகின்றனர். எங்கள் ஊதியமோ ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியர் பெறுவதைவிட குறைவாக இருக்கிறது. இதுதான் எங்களை வேறு வழியில் பணம் சம்பாதிக்கத் தள்ளுகிறது.

இது தொடர்பாக பிரதமர் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.

அடந்த பட்ஜெட் தாக்கலின்போது ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் ஒரு முறை எம்.பி.க்களின் ஊதியம் தானாகவே உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்போதே எம்.எல்.ஏ.,க்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார் உ.பி. எம்.பி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close