[X] Close

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


cabinet-approves-10-reservation-for-the-economically-backward-beyond-the-50-limit

  • போத்திராஜ்
  • Posted: 07 Jan, 2019 15:50 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு(பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதிக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான சட்டத் திருத்த மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாகச் செல்லக்கூடாது, இப்போது அதைக்காட்டிலும் அதிகரிக்கும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாக வேண்டியது இருக்கும் என்பாதல் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர்சாதி வகுப்பினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கவர மத்திய அரசு திடீர் இடஒதிக்கீட்டை அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ இதுவரை உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்தவகையிலும் இடஒதிக்கீடு அளிக்கப்படவில்லை. இப்போது கொடுக்கப்பட உள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், மற்றும் 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர் இந்த இடஒதிக்கீட்டை பெறலாம். இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு வர அரசமைப்புச்சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும் “எனத் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுப்பிரிவினரிடையே வாக்குகளைத் தக்கவைக்கும் நோக்கில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளது அரசு.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close