[X] Close

பள்ளி விழாவில் மாணவிகளுடன் நடனமாடிய எம்.பி.


watch-maharashtra-lawmaker-dance-to-aankh-maarey-at-school-function

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 15:36 pm
  • அ+ அ-

பள்ளிக்கூட விழாவில் மாணவிகளுடன் எம்.பி., ஒருவர் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மதுகர் குக்டே. இவர் தலைமையில் பாந்த்ரா மாவட்டத்தில் பள்ளிக்கூட விழா ஒன்று நடைபெற்றது. 

அந்நிகழ்ச்சியில் மக்களவை எம்.பி. மதுகர் குக்டே, "ஆன்க் மார்ரே" என்ற பிரபல பாலிவுட் பாடலுக்கு நடனமாடினார். 63-வயதான அவர் உற்சாகமாக நடனமாட அவருடன் மானவிகளும் சேர்ந்து கொண்டனர்.

விழா அரங்கில் இருந்த அனைவரும் உற்சாக குரல் எழுப்ப எம்.பி. சில நிமிடங்கள் தன்னை மறந்து நடனமாடினார். மாணவிகள் மராத்திய பாரம்பரிய முறையில் சேலை அணிந்திருந்தனர்.

யார் இந்த குக்டே?
குக்டே பாஜக எம்.எல்.ஏ.,வாக மூன்று முறை இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

அதன் பின்னர் பாந்த்ரா - கோண்டியா பகுதியில் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது குக்டே தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

அத்தொகுதியில் நானா படோல் என்ற பாஜக எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகினார். மோடியின் ஆட்சியை விமர்சித்து அவர் கட்சியிலிருந்து விலகினார்.

இதனால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆனால், இடைத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி., வெற்றி பெற்றார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close