[X] Close

தலித்துகளைக் கவரத் திட்டம்?- அமித் ஷாவின் டெல்லி பேரணியில் 5,000 கிலோவில் பிரம்மாண்டக் கிச்சடி


kichadi

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 14:12 pm
  • அ+ அ-

டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பேரணியில், 5,000 கிலோ கிச்சடி சமைக்கப்பட்டது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட அரிசி மற்றும் பருப்பு வகைகள், சுமார் 3 லட்சம் தலித்துகளிடம் இருந்து பெறப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.

கின்னஸ் சாதனைக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கிச்சடி பிரம்மாண்டமான பாத்திரத்தில் சமைக்கப்பட்டது. இதற்காக 20 அடி விட்டம், 6 அடி ஆழம் கொண்ட பாத்திரம் பயன்படுத்தப்பட்டது. இதை நாக்பூர் சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் சமைத்தார்.

டெல்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற  'பீம் மகாசங்கம் விஜய் சங்கல்ப' பேரணியில் இந்தக் கிச்சடி உருவாக்கப்பட்டது. இதைக் கின்னஸ் சாதனையாக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் டெல்லியில் இந்திய உணவுத் திருவிழா  நடைபெற்றது. அப்போது பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் சமைத்த 918.8 கிலோ கிச்சடி உலக சாதனையாக  இடம்பெற்றது.

அதை முறியடிக்கும் வகையில் 5,000 கிலோ கிச்சடி நிகழ்வை பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் அணி நடத்தியது. இதற்காக அரிசி மற்றும் பயறு வகைகளை தாழ்த்தப்பட்டோர் அணியினர் திரட்டினர். அப்போது அவர்கள் மோடி அரசு குறித்த 14 லட்சம் விழிப்புணர்வுப் பிரசுரங்களை தலித் மக்களிடம் விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close