[X] Close

ரூ.550 கோடி கடன் பாக்கி: அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு


sc-seeks-response-from-anil-ambani-on-ericsson-s-contempt-petition

அனில் அம்பானி

  • போத்திராஜ்
  • Posted: 07 Jan, 2019 12:38 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

எரிக்ஸன் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.550 கோடி கடன் பாக்கியைச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் செலுத்தாததால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். ₹45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.

ஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ₹2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை.தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,600 கோடி தர வேண்டி இருந்தது.

நீதிமன்ற மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு ₹550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம்.

நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில்அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் பார்கவா வி தேசாய் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கபில் சிபல், முகல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகினார்கள். அவர்கள் வாதிடுகையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உடனடியாக ரூ.118 கோடியை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்துகிறோம், மீதத் தவணையை அடுத்தகட்டமாகச் செலுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

இதற்கு எரிக்ஸன் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்தக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ.550 கோடியையும் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்குக் குறைவான தொகையை நாங்கள் ஏற்க முடியாது. ஆதலால், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் மீது அவமதிப்பு வழக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அதிபர் அனில் திருபாய் அம்பானி, நிர்வாகிகள் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பவும், உடனடியாக ரூ.118 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் வரவோலையாக டெபாசிட் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close