[X] Close

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி எம்.ஜி.ஆர்., வேடத்தில் உலாவந்த ஆந்திர எம்.பி.


telugu-desam-party-mp-naramalli-sivaprasad-dressed-up-as-former-tn-cm-mg-ramachandran-during-tdp-protest

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 11:50 am
  • அ+ அ-

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில எம்.பி., நரமள்ளி சிவபிரசாத் தொடர்ந்து பல வேடமிட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்.
இன்று அவர், அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் போல் வேடமிட்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏமாற்றியநிலையில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலங்குதேசம் கட்சி கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையிலும் இருந்து விலகியது. 

இதனையடுத்து  எம்.பி., நரமள்ளி சிவபிரசாத் ஒவ்வொரு முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது விதவிதமான வேடமிட்டுவந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார். 

ஹிட்லர், மந்திரவாதி, பெண், பள்ளி மாணவர், சலவைத் தொழிலாளி எனப் பல்வேறு வேடங்களில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி போன்றுகூட வேடமிட்டு தனது கோரிக்கையை அவர் முன்வைத்திருக்கிறார்.

 

அந்த வரிசையில் இன்று அவர் எம்.ஜி.ஆர்., போல் வேடமிட்டு போராட்டம் செய்து வருகிறார். கையில் எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர்., வைத்திருப்பதுபோல் ஒரு சாட்டையையும் வைத்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close