[X] Close

திருவாரூர் தேர்தலை ரத்து செய்ய சதி: பின்னணி காரணங்களை அடுக்கும் அமமுக புகழேந்தி


conspiracy-to-cancel-thiruvarur-election

புகழேந்தி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 11:02 am
  • அ+ அ-

வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ள திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தோடு சேர்ந்து சதி செய்வதாக அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

கடந்த 3-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 'தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்தது ஏன்?' என கேள்வி எழுப்பினார். எனவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ' தேர்தலை நடத்தலாமா, வேண்டாமா' என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரினார். அதன்படி நடத்தப்பட்ட கூட்டத்தில், தேர்தலை ஒத்தி வைக்குமாறு பெரும்பான்மையான கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பான அறிக்கையை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல் ராஜ் நேற்று முன் தினம் சமரப்பித்துள்ளார். இந்நிலையில் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது:மத்திய மாநில அரசுகளுடன் நன்கு ஆலோசித்த பிறகே தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிடும். ஒரு முறை தேர்தல் அட்டவணையை வெளியிட்ட பின்னர் அதனை மாற்றி அமைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கூட இல்லை. தற்போது வேட்பு மனு தாக்கல் நடந்துவரும் நிலையில், தேர்தல் நடத்தலாமா என கருத்து கேட்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை சந்தேகிக்க தூண்டுகிறது. எனவே அந்த கூட்டத்தை அமமுக புறக்கணித்துள்ளது.

திருவாரூரில் அமமுக முதல் கட்ட களப்பணியை தொடங்கியுள்ள நிலையில், திமுகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டது. மற்ற தேர்தல்களில் முதல் ஆளாக வேட்பாளரை அறிவிக்கும் அதிமுக இதில் இன்னமும் வேட்பாளரை அறிவிக்காதது ஏன்? தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்திலும் தேர்தலை ஒத்தி வைக்க கோரியது ஏன்?இரட்டை இல்லை சின்னம் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே, எல்லாவற்றையும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். அதே போல தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக வந்தது. தற்போது தேர்தலை ரத்து செய்ய சதி வேலை நடப்பதாகவே சந்தேகிக்க தோன்றுகிறது.

ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மத்திய அரசின் மூலம் தேர்தலை தள்ளிப் போடவும், ரத்து செய்யவும் முயன்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close