[X] Close

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி தொகுதிப் பங்கீடு: விரைவில் வெளியிடுவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு


samajwadi-bahujan-samaj-coalition-volume-distribution

அகிலேஷ் யாதவ்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:59 am
  • அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்காக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி-மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் சேர முன்வந்தால் அந்தக் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று 2 கட்சிகளும் அறிவித்துள்ளன. உ.பியில் பாஜகவை வீழ்த்துவதே 2 கட்சிகளின் முக்கிய நோக்கம் என்றும் அவை அறிவித்துள்ளன.

இதுகுறித்து நேற்று அகிலேஷ் யாதவ் கூறும்போது, “தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும்.

கூட்டணியில் காங்கிரஸைச் சேர்க்க வேண்டுமா இல்லையா என்பதை இரு கட்சியின் தலைவர்களும் முடிவு செய்வர்” என்றார்.

மத்தியபிரதேச சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அங்கு வெற்றி பெற்ற சமாஜ்வாதியின் ஒரே ஒரு எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு காங்கிரஸ் மறுத்துவிட்டது. இதனால் காங்கிரஸ் மீது அகிலேஷ் அதிருப்தியில் உள்ளார்.

அதைப் போலவே ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில், கடந்த ஆண்டு தலித்துகள் மீது போடப்பட்டு வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காங்கிரஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். இல்லாவிட்டால் மத்தியபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரண்மோய் நம்பிக்கை2019 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம் என்று சமாஜ்வாதி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா கொல்கத்தாவில் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போபோது, “காங்கிரஸ் கட்சியை சமாஜ்வாதி-பகுஜன் கூட்டணியில் சேர்ப்பதா இல்லையா என்பது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close