[X] Close

எச்ஏஎல் ஒப்பந்தங்கள் குறித்து குற்றம்சாட்டிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?- ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி


will-rahul-gandhi-apologize

நிர்மலா சீதாராமன்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:54 am
  • அ+ அ-

எச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்) நிறுவனத்துக்கு அரசு வழங்கிய ரூ.1 லட்சம் கோடி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் நாட்டை திசை திருப்பும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்பாரா என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், எச்ஏஎல் நிறுவனத்துக்கு அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கொடுத்திருப்பதாக தெரிவித்தார். ஆனால், எச்ஏஎல் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய்க்கு கூட ஒப்பந்தங்கள் வரவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘ரஃபேல் விமான விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார். எச்ஏஎல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ அமைச்சர் பதவி விலக வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அதற்கு உடனடியாக ட்விட்டரில் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். எச்ஏஎல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய ஆதாரங்களையும் வெளியிட்டார். நிர்மலா சீதாராமன் தனது பதிவில், ‘‘2014-ம் ஆண்டுக்கும் 2018-ம் ஆண்டுக்கும் இடையே எச்ஏஎல் நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 73 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நாட்டை ராகுல் காந்தி திசை திருப்புவது வெட்கக்கேடானது. இதற்காக, நாட்டு மக்களிடம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?’’ என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close