[X] Close

லஞ்சம் வாங்கியதாக உத்தரபிரதேச அமைச்சர்களின் உதவியாளர்கள் 3 பேர் கைது


3-people-arrested-assistants-of-the-ministers-of-uttar-pradesh

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:48 am
  • அ+ அ-

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ், உத்தரபிரதேச அமைச்சர்களின் தனி உதவியாளர்களாக பணியாற்றிய 3 பேரை சிறப்பு புலனாய்வு படையினர் (எஸ்ஐடி) கைது செய்துள்ளனர்.

உத்தபிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு தனி உதவியாளராக இருந்தவர் ஓம் பிரகாஷ் காஷ்யப்.அதேபோல், சுரங்கத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு தனி உதவியாளர்களாக முறையே அர்ச்சனா பாண்டே, சந்தோஷ் அவாஸ்தி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மூவரும் தங்கள் துறைகளில் சில பணியிடங்களை நிரப்புவதற்கும், ஒப்பந்தம் வழங்குவதற்கும் லட்சக்கணக்கான பணத்தை லஞ்சமாக கேட்பது போன்ற வீடியோ, தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது.

இதையடுத்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி மூவரையும் எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close