[X] Close

தொலைக்காட்சி நடிகை மர்ம மரணம்


tv-actress-mystery-death

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:41 am
  • அ+ அ-

ஒடிசாவை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை நிகிதா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஒடிசாவின் கட்டாக் நகரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). இவர்  பிராந்திய தொலைக்காட்சி சேனல்களில் நிகிதா என்ற பெயரில் நடித்து வந்தார். குறுகிய காலத்திலேயே  மாநிலத்தின் முன்னணி தொலைக்காட்சி நடிகையாக வளர்ந்தார்.

கடந்த 2017 செப்டம்பரில் நிகிதாவுக்கும் நடிகர் லிபனுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

ஒடிசாவின் கட்டாக் நகரின் மகாநதி விஹாரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் நிகிதா வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தலையில் பலத்த காயத்துடன் கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு சிகிச்சை பலனின்றி நிகிதா உயிரிழந்தார்.

மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் அவரது மரணம் குறித்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. எனவே மர்ம மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு வழக்கின் கோணம் மாறலாம் என்று கட்டாக் போலீஸ் கமிஷனர் சத்யஜித் மொகந்தி நேற்று தெரிவித்தார்.நிகிதா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close