[X] Close

குடும்பப் பின்னணியால் சாதித்தவர் ராகுல்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம்


rahul-achieved-by-family-background

டெல்லியில் நேற்று நடந்த ஜவுளித்துறை தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற அத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:36 am
  • அ+ அ-

டெல்லியில் ஜவுளித்துறை தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியை தகுதியற்ற நபர் என ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார். ஆனால், தம்முடைய தகுதி குறித்து அவர் எண்ணி பார்க்கவில்லை.

தற்போது வரை ராகுல் சாதித்தது அனைத்தும் அவரது குடும்பப்பின்னணியால் மட்டுமே. அவரின் தகுதியாலோ, திறமையாலோ அல்ல. தகுதியே இல்லாத ஒருவர், மற்றவர்களின் தகுதி குறித்து சான்று வழங்குவதுவேடிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட ராகுல் காந்தியை ஏற்க மறுக்கின்றன. இதிலிருந்தே அவரது தகுதி என்ன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள். இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close