[X] Close

பிரச்சார குழு தலைவர் அருண் ஜேட்லி; தேர்தல் அறிக்கை தயாரிக்க ராஜ்நாத் தலைமையில் குழு- பாஜக தலைவர் அமித் ஷா அறிவிப்பு


election-members-for-bjp

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:30 am
  • அ+ அ-

வரும் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நியமிக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் விரை வில் நடைபெற உள்ளது. இதை யடுத்து, கூட்டணி அமைப்பது, பிரச்சார வியூகம் வகுப்பது என தேர்தலுக்கான ஆயத்த பணி களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக தலைவர் அமித் ஷா நேற்று 17 குழுக்களை அமைத்தார்.

இதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட 20 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல, பாஜக பிரச்சாரக் குழு தலைவராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நியமிக்கப்பட்டுள்ளார். சமூக மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சந்திக்கும் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தலைவர்களின் உரை தயாரிப்பு குழு தலைவராக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் ஊடக குழு தலைவராக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் அறிவு ஜீவுகளை சந்திக்கும் குழுவின் தலைவராக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் வாறு பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close