[X] Close

அரசியலில் மகனை முன்னிறுத்தினால் ஆந்திர மாநிலம் இருளில் மூழ்கும்: சந்திரபாபு நாயுடு மீது மோடி குற்றச்சாட்டு


chandra-babu-naidu

மகன் நாரா லோகேஷுடன் சந்திரபாபு நாயுடு.

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 10:26 am
  • அ+ அ-

மகனை அரசியலில் முன்னி றுத்துவதால் பிரகாசமான ஆந்திராவில் சூரியன் அஸ்தமித்து மாநிலமே இருளில் மூழ்கும் சூழ்நிலையை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தி வருகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டியினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மகனை அரசியலில் முன்னிறுத்தி தூக்கிவிட முயற்சித்து வருகிறார். தனது கொள்கைகளும் ஊழல்களும் மாநிலத்தை எப்படி இருளில் மூழ்க வைக்கும் என்பதை அவர் உணரவில்லை. மகனை அரசியலில் முன்னிறுத்துவதால் பிரகாசமான ஆந்திராவில் சூரியன் அஸ்தமித்து மாநிலமே இருளில் மூழ்கும் சூழ்நிலையை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தி வருகிறார். தனது மகனுக்குத்தான் அவர் முன்னுரிமை அளிக்கிறார். ஆந்திராவின் மற்ற மகன்கள், மகள்களின் நலனை அவர் மறந்துவிட்டார்.

தெலுங்கு மக்களின் பெருமை என்பது அனைத்து தரப்பினரையும் அரவணைத்து சமமான வாய்ப்பு அளிப்பது. ஒரே குடும்பம் மட்டுமே அதிகாரத்தை வைத்திருந்தால் அவர்களால் எப்படி தெலுங்கு மக்களின் பெருமையை காக்க முடியும்? அதிகாரத்துக்காக மக்கள் நலத்தை புறக்கணித்தால் அது தெலுங்கு மக்களின் பெருமையாக இருக்க முடியாது. அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத் தால் இரவும் பகலும் மோடியையே திட்டிக் கொண்டிருப்பது தெலுங்கு மக்களுக்கு பெருமை சேர்க்குமா? முதல்வராக பணியாற்றுவதிலேயே தோல்வி அடைந்துவிட்டு, பிரதமராகிவிட லாம் என்று பகல் கனவு காண்பது தெலுங்கு மக்களின் பெருமையை காப்பாற்றுமா?

தெலுங்கு மக்களின் உண்மை யான பெருமைக்குரிய அடையாள மாக மறைந்த முன்னாள் முதல் வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவ் உள்ளார். ஆந்திராவில் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ராமரா வின் முதுகில் குத்தி அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினர். தெலங்கு மக்களின் நலனுக்கு துரோகம் செய்த காங்கிரசை ராமராவ் கடைசிவரை மன்னிக்க வில்லை.

ஆனால், காங்கிரசுடன் கைகோத்ததன் மூலம் ஆந்திரா ஆட்சியாளர்கள் ராமராவின் முதுகில் இரண்டாவது முறையாக குத்தி அவருக்கு துரோகம் செய்துள் ளனர். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஆந்திர மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும். ராமராவின் கொள்கைகளுக்கு துரோகம் செய்த வர்களை தேர்தலில் மக்கள் தோற் கடிப்பதுதான் அவருக்கு செலுத் தும் உண்மையான அஞ்சலி. இவ்வாறு மோடி கூறினார்.

‘வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கிறார் சந்திரபாபு’

சந்திரபாபு நாயுடுவின் ஒரே மகன் நாரா லோகேஷ். தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியவர். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் நாரா லோகேஷ் உள்ளார்.

என்.டி.ராமராவின் மாப்பிள்ளைதான் சந்திரபாபு நாயுடு. லட்சுமி சிவபார்வதியை என்.டி.ராமராவ் திருமணம் செய்துகொண்டு அரசியலில் அவரை முன்னிறுத்தியதை எதிர்த்து ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி முதல்வர் ஆனவர் சந்திரபாபு நாயுடு. அவரே இப்போது தனது மகனுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பதவி அளித்து வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கிறார் என்று புகார்கள் எழுந்துள்ளன. இதைத்தான் பிரதமர் மோடி நேற்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close