[X] Close

ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் இணைக்க விரைவில் சட்டம்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு


ravishankar-prasad

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 06:50 am
  • அ+ அ-

பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் நேற்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். அவர் பேசும்போது, “ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணையும், வாகன ஓட்டுநர் உரிமத்தையும் இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

இதற்கான அறிவிப்பு விரை வில் வெளிவரும்.

தற்போது விபத்துகளை உண்டாக்கும் நபர்கள், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து மாற்று உரிமத்தையும் அவர் பெற்று விடுகிறார். இதனால் அவர் தண்டனையிலிருந்து எளிதில் தப்பிவிடுகிறார். ஆனால் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படும்போது சம்பந்தப் பட்ட நபர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

அவர் தனது பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அவரது விரல் ரேகை, கண் கருவிழிப் பதிவுகள் உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. மாற்று ஓட்டுநர் உரிமம் பெற அவர் விண்ணப் பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கெனவே ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுள்ளார். அவருக்கு புதிய உரிமம் தரக்கூடாது என கம்ப்யூட்டர் எச்சரிக்கும்.

எனவே ஓட்டுநர் உரிமம், ஆதார் எண் இணைப்பு அவசிய மாகிறது. நாட்டில் இதுவரை 123 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வந்து திறம்பட மத்திய அரசு செயலாற்றி வருகிறது” என்றார். 

பிடிஐ

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close