[X] Close

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை


6-members-sucide

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 13:11 pm
  • அ+ அ-

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மெடகல் கிராமத்தை சேர்ந்தவர் ஷேகரய்யா (56). இவர் தனது மனைவி ஜெயம்மா (42) மகள்கள் 4 பேருடன் அங்குள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு ஷேகரய்யா தனது மனைவி மற்றும் 4 மகள்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவர் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கொப்பல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 6 பேரின் உடல்களையும், பிரேத பரிசோதனைக்காக கொப்பல் பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close