[X] Close

மே.வங்கத்தில் இருந்து பிரதமராக வர மம்தா பானர்ஜியே சிறந்தவர்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை


if-any-bengali-has-chance-to-be-pm-its-mamata-banerjee-state-bjp-chief

மம்தா பானர்ஜி

  • போத்திராஜ்
  • Posted: 06 Jan, 2019 13:11 pm
  • அ+ அ-

கொல்கத்தா, பிடிஐ

மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வருவதற்குச் சாத்தியம் இருக்கிறதென்றால் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிதான் என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள். பாஜக நடத்தும் ரதயாத்திரைக்கு அனுமதி அளிக்க மேற்குவங்க அரசு மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு எதிர்திருவங்களாக இருக்கும் நிலையில் இந்தக் கருத்தை பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேற்று 64-வது பிறந்தநாளாகும். இதுகுறித்து மாநில பாஜக தலைவர் திலிப் கோஷிடம் நிருபர்கள் கேட்டனர்.

அப்போது அவர் கூறுகையில் “ மேற்கு வங்கத்தின் எதிர்காலம் மம்தாவின் வெற்றியைச் சார்ந்து இருக்கிறது. அவருக்கு நல்ல உடல்நிலை அவசியம். ஏனென்றால் எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து யாரேனும் பிரதமர் பொறுப்புக்குத் தகுதியானவராக இருந்தால், அது மம்தா பானர்ஜியாகத்தான் இருப்பார். மேற்கு வங்கத்தின் சார்பில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியைப் பெற்றோம், அடுத்ததாக மேற்கு வங்கத்தில் இருந்து பிரதமராக ஒருவரைப் பெற இருக்கிறோம் “ எனத் தெரிவித்தார்.

திலிப் கோஷ்

பாஜகவில் இருந்து யாரும் மாநிலத்தில் பிரதமர் வேட்பாளருக்குத் தகுதியானவர் இல்லையா என நிருபர்கள் கேட்டனர், அதற்கு திலிப் கோஷ் கூறுகையில், “ பிரதமர் வேட்பாளர் போட்டியில் மம்தா பானர்ஜிதான் முதலிடத்தில் இருக்கிறார். பிற்காலத்தில் பாஜகவில் இருந்து வரலாம். ஆனால், மம்தாவுக்குததான் முதல் வாய்ப்பு, வங்க மக்களும் அவரைத்தான் தேர்வு செய்வார்கள். ஜோதிபாசுவுக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை அனுமதிக்கவில்லை.

மம்தா பானர்ஜி அடுத்த பிரதமராக நான் வாழ்த்துகிறேன். அதேசமயம், 2019-ம் ஆண்டில் மோடி மீண்டும் நாட்டை வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு திலிப் கோஷ் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close