[X] Close

சிறையில் சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு


vijayashanthi-mets-sasikala

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 13:07 pm
  • அ+ அ-

பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நடிகையும், முன்னாள் எம்பியுமான‌ விஜயசாந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள அமமுக பொதுச்செய லாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அவ்வப்போது சந்தித்து வருகின் றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகையும், முன்னாள் எம்பியுமான விஜய சாந்தி சந்தித் துப் பேசியதாக தகவல் வெளி யானது.

இதுகுறித்து சிறை வட்டாரத் தில் விசாரித்த போது, ‘‘தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக உள்ள விஜய சாந்தி, சசிகலாவிடமும், சிறைத் துறையிடமும் முன் அனுமதி பெற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சசிகலாவும், விஜயசாந்தியும் சுமார் 1 மணி நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்''என தெரிவித்தனர்.

இது குறித்து பெங்களூருவில் சசிகலாவுக்கு நெருக்கமான சிலர் கூறுகையில், ‘‘சசிகலாவுக்கும் விஜயசாந்திக்கும் நீண்டகாலம் தொடர்பு உள்ளது. ஜெயலலிதா வின் மறைவுக்கு பிறகும், நட ராஜனின் மறைவுக்கு பிறகும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நீண்ட காலமாக அவரை சிறையில் சந்திக்க விஜயசாந்தி முயன்று வந்தார். தற்போது அவரது ஒப்புத லின்பேரில் ஹைதராபாத்தில் இருந்து வந்து சந்தித்தார். வருகிற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டதாக தெரிகிறது''என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close