[X] Close

விவசாயிகளை ஏமாற்ற பார்க்கிறது காங்கிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு


farmers

ஜார்க்கண்ட் மாவட்டத்தில் நேற்று நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது நீர்ப்பாசனத் திட்ட மாதிரி குறித்து பிரதமரிடம் விளக்கும் அதிகாரிகள். உடன் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் உள்ளார். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 13:04 pm
  • அ+ அ-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்குவதற்காக பிரதமர் மோடி நேற்று ஜார்க்கண்ட் வந்தார். டால்டன்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பிரதமர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ரூ.2,391.36 கோடி மதிப்பிலான மண்டல் அணை உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, “ஏற்கெனவே இருந்த பல அரசுகள் ஜார்க்கண்ட் மாநில விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவில்லை. மண்டல் அணைத் திட்டம் நிறைவேறாமல் போனதற்கு முந்தைய அரசுகளே காரணம். இந்தத் திட்டம் நிறை வேறினால் லடேகர், பலாமு, கார்வா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பிஹாரில் அவுரங்காபாத், கயா பகுதிகளும் பயனடையும்.

விவசாயிகளை நாம் உணவு வழங்கும் உன்னத மனிதர்களாகப் பார்க்கிறோம். ஆனால் முந்தைய அரசுகள் அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகத்தான் பார்த்தன. முந்தைய காங்கிரஸ் அரசு, விவசாயிகளை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளியது. இப்போது கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெளிவான, ஊழலற்ற நிர்வாகத்தைத் தந்து வருகிறது. இதனால் இடைத்தரகர்கள் ஒழிக் கப்பட்டு விட்டனர். விவசாயி களுக்கு தேவையான அனைத் தும் அவர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் போய் சேர்கிறது. அரசுத் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைகின்றன.

விவசாயிகளை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே காங்கிரஸ் கட்சி கருதி வருகிறது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்கள் நலனுக்காக பாடு பட்டு வருகிறது” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close