[X] Close

பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி கேளுங்கள்: மக்களிடம் ராகுல் வேண்டுகோள்


rafale-scam

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 13:02 pm
  • அ+ அ-

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஒவ்வொரு இந்தியரும் கேள்வி எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இரண்டு மணி நேரம் பேசினார். ஆனால் அவையில் நான் எழுப்பிய 2 எளிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தை வழங்கியது யார்? ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தபோது பிரதமர் மோடி அதை புறந்தள்ளி ஒப்பந்தத்தை இறுதி செய்தது உண்மையா, இல்லையா?இந்த கேள்விகளை பிரதமர் மோடியிடம் ஒவ்வொரு இந்தியரும் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close