[X] Close

சினிமா நடிகர்கள், தயாரிப்பாளார்கள் ‘சிறப்பு வாய்ந்தவர்களா?’ சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும்: ஐடி ரெய்டு குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி


it-raid

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 12:59 pm
  • அ+ அ-

கர்நாடகாவில் பிரபல நட்சத்திரங்களான ஷிவ ராஜ்குமர், புனீத் ராஜ்குமார், சுதீப், யாஷ் ஆகிய நடிகர்கள் மற்ரும் தயாரிப்பாளர்களான சி.ஆர்.மனோகர், ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரிகந்தூர் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 3வது நாளாக சனிக்கிழமையன்றும் தொடர்ந்தது.

வருமான வரிச்சோதனைகள் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, வரி ஏய்ப்பு பற்றிய தகவல் கிடைத்ததையடுத்தே வருமான வரிச் சோதனைகள் நடைபெறுகின்றன என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வருமான வரிச்சோதனையின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு, “ரெய்டுகளை அரசியல் சதி என்று கூறுவதற்குப் பதிலாக, வருமான வரி அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்கின்றனர் என்று கூற வேண்டும்.  தகவல் சரியாக இருக்கும் போது அவர்களுக்கு வேறு தெரிவு என்ன இருக்க முடியும்?

சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் அல்ல, யாராக இருந்தாலும் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.  விதிமீறல்கள், ஏய்ப்புகள் பற்றிய தகவல்கள் வரும் போது சட்ட நடவடிக்கை அதனைத் தொடரும்” என்றார் முதல்வர் குமாரசாமி.

ஆனால் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, பாரபட்சமின்றி ரெய்டு நடந்தால் ஆட்சேபணையில்லை, ஆனால் அது எந்த ஒரு அரசியல் கட்சியை நோக்கியதாகவும் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம் என்றார்.

மறைந்த கன்னட முன்னாள் மெகா நடிகர் ராஜ்குமாரின் மகன்களான ஹாட்ரிக் ஸ்டார் ஷிவராஜ்குமார், இன்னொரு மகன் புனீத் ராஜ்குமார் ஆகியோர் வசூல் சாதனைப் படங்களைக் கொடுத்துள்ளனர்.

சுதீப் கன்னட பிக்பாஸ் ஆங்கராக இருந்து வருகிறார்.  பாகுபலியில் இவரது நடிப்புக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்த படமாகும்.

ராக்லைன் வெங்கடேஸ்ஹ் என்பவர் இந்திப் படம் ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.  கேஜிஎஃப் படத்தில் ஹஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் ஆகியோர் நடித்துள்ளனர், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளவர் விஜய்.

இந்தப் படம் டிசம்பர் 21ம் தேதி நாடு முழுதும் 2460 திரைகளில் வெளியானது, மேலும் இது கன்னடாவைல் மட்டுமல்ல இந்தி, தமிழ் வடிவங்களிலும் பாக்ஸ்-ஆபீஸ் ஹிட் என்று கூறப்படுகிறது.

ரெய்டு நடத்தப்பட்ட தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகர் தன்வி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர். இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களைத் தயாரித்துள்ளார்.

இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தி வில்லன்’ இதில் ஷிவ ராஜ்குமார், சுதீப், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்கள் மீதுதான் தற்போது ஐடி ரெய்டு பாய்ந்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close