[X] Close

2019 மக்களவைத் தேர்தல்: கூட்டணிக்கு ‘கொள்கை அளவில்’ சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒப்புதல்


2019-lok-sabha-elections

  • முத்துக்குமார்
  • Posted: 05 Jan, 2019 20:21 pm
  • அ+ அ-

2019 மக்களவைத் தேர்தல் நெருங்குவதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2 பெரிய கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைக்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாதக் கடைசியில் வெளியாகும் என்று சமாஜ்வாதி தேசியச் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மாயாவதியும், அகிலேஷ் யாதவ்வும் இது குறித்த சிலபல சந்திப்புகளுக்குப் பிறகு ‘கொள்கை அளவில்’ கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், “சிறிய கட்சிகள் சிலவற்றையும் கூட்டணியில் இணைப்பது பற்றிய பரிசீலனை உள்ளது, இதில் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியும் அடங்கும்” என்றார் அவர். 

காங்கிரஸ் கட்சியும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சவுத்ரி, “இது குறித்த முடிவை மாயாவதியும், அகிலேஷ் யாதவ்வும் எடுப்பார்கள். ஆனால் அமேதி, ரேபரேலி தொகுதியில் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாது, அந்த 2 இடங்கள் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு” என்றார்.

இந்தக் கூட்டணி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஹீரோ பாஜ்பாய் கூறும்போது, “இது முழுக்க முழுக்க சந்தர்பவாதக் கூட்டணி, மக்கள் விரோதக் கூட்டணி. 2019-ல் உ.பி.யில் பாஜக பெரிய வெற்றியைக் குவிக்கும்” என்றார். 

உ.பி. மாநிலம் மூலம் 80 எம்.பி.க்கள் லோக்சபாவுக்குச் சென்றுள்ளனர். ஆனால் 2018-ல் 3 இடைத்தேர்தல் தொகுதிகளில் பாஜக தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close