[X] Close

நடந்தது சிவில் பணப் பரிவர்த்தனையே: பூசி மெழுகும் நிரவ் மோடி


nirav-modi-terms-pnb-scam-as-civil-transaction

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jan, 2019 16:14 pm
  • அ+ அ-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவ்விவகாரத்தில் நடந்தது சிவில் பணப் பரிவர்த்தனைதான் பணச் சலவை அல்ல. ஆனால் அதை பூதாகரமான குற்றமாக ஜோடிக்கின்றனர் என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்.

ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர், இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நகைக்கடைகளுக்கு சொந்தக்காரர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்ற புகழோடு வலம் வருபவர் நிரவ் மோடி.

இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார். 

இவரும் இவரது உறவினர் மெஹுல் சோஸ்கியும் வெளிநாடு தப்பிவிட்டனர்.

இந்நிலையில், மல்லையா, நிரவ் மோடி போன்று வெளிநாடு தப்பியோடியவர்களை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் என Fugitive Economic Offenders Act என்ற புதிய சட்டத்தின்கீழ் அறிவிக்கும்படி அமலாக்கத் துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றது சிவில் பரிவர்த்தனை மட்டுமே.  வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனை ஏதும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

இந்த சட்டத்தின் கீழ் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்று முதலில் அறிவிக்கப்பட்டவர் ஆகியிருக்கிறார் விஜய் மல்லையா.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close