[X] Close

என்னிடம் வம்பிழுக்காதீர்கள்; மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்: பாஜகவினரை எச்சரித்த சந்திரபாபு


if-you-try-to-mess-you-ll-be-finished

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jan, 2019 14:30 pm
  • அ+ அ-

"என்னிடம் வம்பிழுக்காதீர்கள்; மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்" என பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனத்தை காக்கிநாடாவில் பாஜகவினர் மறித்தபோது ஆவேசமடைந்த அவர், "என்னிடம் வம்பிழுக்காதீர்கள்; மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள்" என எச்சரித்தார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில், "எனக்கு இடையூறு செய்ய நினைத்தீர்கள் என்றால் நீங்கள் முடிந்துவிடுவீர்கள். பிரதமர் பெயரை வெளியில் சொல்லிப் பாருங்கள் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். மோடியை ஆதரிக்க ஆந்திர பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்" என எச்சரிக்கை தொணியில் கூறினார்.

 

 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கத் தவறியதால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினார் சந்திரபாபு நாயுடு.

அதன்பின்னர் தொடர்ந்து பாஜகவையும் பிரதமர் மோடியையும் காட்டமாக அவர் விமர்சித்து வருகிறார். மக்களவை தேர்தலுக்கான மெகா கூட்டணிக்கான அடித்தளம் அமைப்பதில் சந்திரபாபு நாயுடுவின் பங்கு மிகப் பெரியது.

மோடிக்கு எதிராக ஓரணியாக திரள வேண்டும் என்பதில் அவர் பல்வேறு பிராந்திய கட்சியினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close