[X] Close

பேட்மிண்டன் விளையாடி அசத்திய மம்தா பானர்ஜி!- வைரலாகும் வீடியோ


mamata-banerjee-shows-off-badminton-skills-in-viral-video

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jan, 2019 13:28 pm
  • அ+ அ-

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேட்மிண்டன் விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் இப்போது ஒரே பெண் முதல்வர்தான் இருக்கிறார். அவர்தான் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி ஓவியம், கவிதை எழுதுதல், இசைக் கருவிகளை இசைத்தல் ஆகியவற்றில் தேர்ந்தவர். பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக அரசியல் விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பவர் நிஜமாகவே களத்தில் இறங்கி பேட்மிண்டன் விளையாட்டும் விளையாடியுள்ளார்.

இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் வலைப்பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். பிர்பும் மாவட்டத்தில் ஜங்கள் மஹால் கோப்பை விளையாட்டுத் திருவிழாவில் முதல்வர் மம்தா கலந்து கொண்டார்.அப்போது அவர் பேட்மிண்டன் விளையாடினார்.

அந்த காட்சி அடங்கிய வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக எங்களுக்கு விளையாட்டு பிடிக்கும். கிராம விளையாட்டுத் திருவிழாவில் ஒரு சின்ன அடையாளம் எனப் பதிவிட்டிருக்கிறார்.

 

 

கடந்த ஆண்டு ஜெர்மணியில் மிக்கி மவுஸ் வேடமிட்ட நபரின் கையில் இருந்த அக்கார்டியன் இசைக் கருவியில் ஹோங்கே காம்யாப்  ஹம் ஹோங்கே காம்யாப் என்ற தேசபக்தி பாடலை இசைத்த வீடியோ வைரலானது.

அரசியல் களம் ஒருபுறம் ஆடுகளம் மறுபுறம்..
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி, ஜனநாயகத்தைக் காப்போம் என்ற ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டது. ஆனால், இந்த யாத்திரை நடந்தால், அமைதிக்குக் குந்தகம் விளையும், வன்முறைச் சம்பவங்கள் ரதயாத்திரை செல்லும் இடங்களிலும் நடக்கும் என்று உளவுத்துறை மே.வங்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாஜகவுக்கு ரத யாத்திரை நடத்த முதல்வர் மம்தா அரசு அனுமதி மறுத்துவிட்டது.

ரத யாத்திரை நடத்துவது மக்களைக் கொல்வதற்கும், வன்முறையைத் தூண்டிவிடுவதற்கும் அல்ல என்று வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார்.

பாஜகவுக்கு அரசியல் களத்தில் கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டே ஆடுகளத்தில் அட்டகாசமாக விளையாடியிருக்கிறார் மம்தா.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close