[X] Close

மதத்தின் பெயரில் வெறுப்புச் சுவர் உருவாக்கப்படுகிறது!- நசிருதீன் ஷா தாக்கு


walls-of-hatred-in-name-of-religion-naseeruddin-shah-in-amnesty-video

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jan, 2019 13:11 pm
  • அ+ அ-

மதத்தின் பெயரில் வெறுப்புச் சுவர் உருவாக்கப்படுகிறது என பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, நம் நாட்டில் மனிதர்களைவிட பசுக்கள் மீது அதிக அக்கறை காட்டப்படுகிறது என்று யூடியூப் வீடியோவில் பேசியதால் பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தவர் தற்போது ஆம்னெஸ்டி இந்தியா மனித உரிமைகள் கலந்துரையாடலில் பேசும்போது மீண்டும் அதுபோன்றதொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

2.13 நிமிடங்கள் அவர் பேசியிருக்கிறார். அதில் அவர், "கலைஞர்கள், நடிகர்கள், அறிவுஜீவிகள் எல்லோரும் நசுக்கப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் மவுனமாக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் வெறுப்பும் கொடூரமும் நிறைந்திருக்கிறது.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அலுவலகங்கலில் ரெய்டு நடத்தப்படுகிறது. அவர்களின் தொழில் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.

மதத்தின் பெயரால் வெறுப்புச் சுவரை உருவாக்குகின்றனர். அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர்.

இத்தகைய எதிர்காலத்தை நோக்கிதான் நம் தேசம் நகரம் வேண்டுமா? கருத்து வேற்றுமைக்கு இங்கு இடமில்லையா? பணக்காரர்கள், பலம் வாய்ந்தவர்கள் குரல்களுக்கு மட்டும்தான் இடமிருக்கிறதா? ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் நிலைதான் என்ன? சட்டம் இருந்த இடத்தில் இப்போது இருள்தான் இருக்கிறது.

அரசியல் சாசன உரிமைகளுக்காக நிற்போம்" எனப் பேசியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close