[X] Close

டெல்லி காங்கிரஸ் தலைவராகிறார் ஷீலா தீட்சித்?


ex-chief-minister-sheila-dikshit-may-be-made-delhi-congress-chief-report

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jan, 2019 12:26 pm
  • அ+ அ-

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மூத்த தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "எதுவாக இருந்தாலும் கட்சியும் கட்சித் தலைமையான ராகுல் காந்தியும் முடிவு செய்யட்டும். மேலிடத்துக்கு முடிவு எதுவென்றாலும் அதை ஏற்கத் தயார்" என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித்தை வீழ்த்தி ஆட்சி அமைத்தார். ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றி பெற்றது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையேயான கருத்து மோதலில் ஷீலா தீட்சித் எப்போதும் கேஜ்ரிவாலையே விமர்சித்துவந்தார்.

ஆம் ஆத்மி கட்சியுடன் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படும் நிலையில், ஷீலா தீட்சித் கட்சித் தலைமையின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்கத் தயார் எனக் கூறியிருக்கிறார்.

அஜய் மாக்கான் விலகலுக்கு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சொல்லப்பட்டாலும்கூட ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையால்தான் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close