[X] Close

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தால் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் மனக்கசப்பு: மக்களவை தேர்தலில் பாதிக்கும் வாய்ப்பு


kumarsamy-discussion

  • kamadenu
  • Posted: 05 Jan, 2019 09:56 am
  • அ+ அ-

அண்மையில் கர்நாடக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம், மக்களவை தேர்தலில் வெற்றியை பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது முதலாகவே அமைச்சரவை பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் இரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர் களும் பதவி கேட்டு போர்க்கொடி தூக்குவதால் கர்நாடக அரசியல் களத்தில் அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், கர்நாடகாவில் அண்மையில் 8 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்னர். இதில் மஜதவை சேர்ந்த‌ ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், பதவி கிடைக்காத காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனிடையே, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி (காங்கிரஸ்) அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணியில் விரிசல்அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், காங்கிரஸ் - மஜத கூட்டணியில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், துறை ஒதுக்கீடு செய்வ‌திலும் சிக்கல் எழுந்துள்ளது.

அமைச்சரவையில் நீர்வளம், சட்டம், தகவல் தொழில்நுட்பம், உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மஜதவைச் சேர்ந்த‌ அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளும் ஒதுக்கப்படாததால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதே போல, காங்கிரஸில் துணை முதல்வர் பரமேஷ்வர் கைவசம் இருந்த உள்துறை எம்.பி. பாட்டீலுக்கு வழங்கப்பட்டதால் பரமேஷ்வர் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதனால், மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை இரு கட்சிகளுக்குமே சவாலாக மாறியுள்ளது.

ராகுல் முயற்சிஇது குறித்து 'இந்து தமிழ்' நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் கூறுகையில், 'அதிருப்தியாளர்களுடன் மாநில நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ராகுல் காந்தி விரைவில் டெல்லிக்கு அழைத்து பேச உள்ளார். இந்த பிரச்சினை சமரசம் செய்யப்பட்டு, கூட்டணியில் தொகுதிகளும் முடிவாகும்' எனத் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close