[X] Close

ரூ.550 கோடி செலுத்தாத அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேற தடை: உச்ச நீதிமன்றத்தில் எரிக்ஸன் நிறுவனம் மனு


ericsson-india-moves-sc-seeks-contempt-action-against-anil-ambani-others

அனில் அம்பானி

  • போத்திராஜ்
  • Posted: 05 Jan, 2019 09:50 am
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.550 கோடி செலுத்தாத ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனர் அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் எரிக்ஸன் நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி டிசம்பர் மாதத்துக்குள் செலுத்த வேண்டிய தவணையையும் செலுத்தாத அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், சிவில் சிறையிலும் வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். ₹45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.

ஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ₹2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை.தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,600 கோடி தர வேண்டி இருந்தது.

நீதிமன்ற மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு ₹550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்சன் சம்மதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்சன் நிறுவனம்.

நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில்அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் பார்கவா வி தேசாய் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் “ உச்ச நீதிமன்றம் இருமுறை உத்தரவிட்டும் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி நிலுவைத் தொகையை வழங்கவில்லை. ஆதலால், அனில் அம்பானி, ரிலையன்ஸ் டெலிகான் தலைவர் சதீஸ் சேத், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் தலைவர் சாயா விரானி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். இவர்கள் நாட்டை விட்டு வெளியேதடை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு, பணம் செலுத்தாத வரை சிவில் சிறையில் வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close