[X] Close

கொலை, காமக் களியாட்டத்தால் தீட்டுப்படாதா?- சுப.வீ காட்டம்


suba-vee-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jan, 2019 15:55 pm
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் இருவர் நுழைந்து தரிசனம் செய்ததற்காக தீட்டு பட்டுவிட்டதாக கோயில் நடை சாத்தப்பட்டு சுத்தீகரணச் சடங்குகள் செய்யப்பட்டது.

இதனைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது தீட்டுப்படாத கோயில், தேவநாதன் காமக் களியாட்டத்தில் தீட்டுப்படாத கோயில், பெண்கள் இருவர் _ அதுவும் இந்துப் பெண்கள் -  உள்ளே நுழைந்தவுடன் தீட்டுப்பட்டு விடுகிறதே, எப்படி?#சபரிமலை" எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கூறியது. 

இத்தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு முனைப்பு காட்டிய நிலையில், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதனால் சபரிமலை நடை திறக்கப்படும் போதெல்லாம் பிரச்சினை வெடித்தது. இதனால் நடை திறக்கும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, மலப்புரம் பகுதியை சேர்ந்த கனக துர்கா (44), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து அம்மினி (40) ஆகியோர் புதன் கிழமை அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

இதனையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு சுத்தீகரண பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close