[X] Close

ரூ.2000 நோட்டு அச்சடிப்பு குறைப்பு ஏன்?- பொருளாதார விவகாரத்துறை செயலர் விளக்கம்


no-decision-on-printing-rs-2000-notes-have-adequate-in-system-official

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jan, 2019 13:19 pm
  • அ+ அ-

ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி மிக மிக குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதற்கான காரணம் என்னவென்று பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கமளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில். "நோட்டுகளை அச்சிடும் பணி தேவைக்கேற்பவே திட்டமிடப்படுகிறது.

ரூ.2000 நோட்டுகள் இப்போதைக்கு தேவைக்கு அதிகமாகவே புழக்கத்தில் உள்ளன. மொத்த பணப்புழக்கத்தில் 35%-க்கும் மேலாக ரூ.2000 நோட்டுகள் உள்ளன.

அதனாலேயே ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது தொடர்பாக அண்மக்காலமாக எந்த புதிய முடிவும் எடுக்கப்படவில்லை" என்றார்.
ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதையே அரசாங்கம் நிறுத்திவிட்டது என்று வதந்திகள் கிளம்பிய நிலையில் பொருளாதார விவகாரத் துறை செயலர் இந்த ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. மிகக் குறைந்தளவிலேயே ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிப்பதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அந்த மூத்த அதிகாரி கூறும்போது, "ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் இணைந்தே நாட்டில் உள்ள பணப்புழக்கத்தின் அடிப்படையில் எவ்வளவு நோட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்படும்போதே காலப்போக்கில் அதனை அச்சிடும் அளவு குறைக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஏனெனில் அதிகமுக மதிப்பீடு கொண்ட 2000 ரூ. நோட்டானது பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையை சரிசெய்யவே அச்சிடப்பட்டது. 

எனவே, இது புதிதாக எடுக்கப்பட்ட முடிவு ஒன்றுமில்லை" என விளக்கியிருந்தார்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close