[X] Close

சபரிமலையில் மேலும் ஒரு பெண் தரிசனம்!- 18 படிகள் ஏறி ஐயப்பனை வழிபட்டார்


the-kerala-police-confirmed-that-a-46-year-old-sri-lankan-woman-offered-prayers-at-the-sanctum-in-sabarimala-temple-on-late-thursday

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jan, 2019 09:32 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த புதன்கிழமை பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் தரிசனம் மேற்கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் தரிசனம் செய்திருக்கிறார்.

இதனை கேரள போலீஸாரும் உறுதி செய்தனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு அவர் தரிசனம் செய்திருக்கிறார்.

தரிசனம் செய்த அந்தப் பெண்ணின் பெயர் சசிகலா. வயது 46. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் இவர். தந்தை பெயர் அசோக் குமரன். அவரது பாஸ்போர்ட்டில் பிறந்தநாள் என்று டிசம்பர் 3, 1972 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தரிசனம் செய்த மூன்றாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாது, 18 படிகள் வழியாக ஏறி ஐயப்பனை தரிசித்த முதல் பெண் பக்தர் என்ற பெருமையையும் சசிகலா பெற்றிருக்கிறார்.

தீர்ப்பும் ஆலயப் பிரவேசமும் போராட்டமும்:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கு மாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கூறியது. இத்தீர்ப்பை அமல் படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு முனைப்பு காட்டிய நிலையில், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதனால் சபரிமலை நடை திறக்கப்படும் போதெல்லாம் பிரச்சினை வெடித் தது. இதனால் நடை திறக்கும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த கனக துர்கா (44), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து அம்மினி (40) ஆகி யோர் புதன் கிழமை அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர்.  

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close