[X] Close

‘தேர்தல் நெருங்குகிறது சார்...பத்திரிகையாளர்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள்’? - பிரதமர் மோடிக்கு சத்ருகன் சின்ஹா பகடி தொனியில் அறிவுரை


sinha-slams-modi

  • kamadenu
  • Posted: 04 Jan, 2019 09:28 am
  • அ+ அ-

புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியை கடுமையாக விமர்சித்த பாஜக-வின் உள் விமர்சகர் சத்ருகன் சின்ஹா, பத்திரிகையாளர்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள் பிரதமரே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார், பிரதமரை பேட்டி எடுத்தவர் எடுட்டர் ஸ்மிதா பிரகாஷ் ஆவார்.

இந்த நேர்காணலை விமர்சித்த சத்ருகன் சின்ஹா, “சார், உங்களது, நன்கு எழுதப்பட்ட, நன்கு கட்டப்பட்ட, நன்கு ஆராயப்பட்ட, மற்றும் நன்கு ஒத்திகைப்பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நேர்காணலை திங்கள் மாலையில் நாங்கள் அனைவரும் பார்த்தோம். உங்களை நேர்காண்ட ஸ்மிதா பிரகாஷுக்கு உரிய மரியாதை கொடுத்து நான் உங்களைக் கேட்கிறேன், உறுதியான, முன் தயாரிப்பில்லாத சூடான கேள்விகளை எதிர்கொண்டு நீங்கள் ஒரு திறமையான தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்க இதுவே தருணம்.

உங்களால் அதை எதிர்கொள்ள முடியாது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் குறைந்தது, மிகப்பெரிய ராஜீயவாதியான யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தைரியமாவது உங்களுக்கு வேண்டும் என்று நினைக்கிறோம். நேர்காணலில் நீங்கள் நிதானமாகவும் எதார்த்தமாகவும் இருந்தீர்கள், ஆனால் அது உங்கள் முந்தைய சந்திப்புகளை விடவோ அதற்குச் சமமாகவோ திருப்திபடுத்துமாறு இல்லை.

கடந்த காலங்களில் அனைத்து பிரதமர்களும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். ஆனால் உங்களது இந்த 4.5 ஆண்டுகள் அரசாட்சியில் ஒருமுறை கூட செய்தியாளர்களைச் சந்திக்கவில்லையே. இது என் சார்? அரசுக்கு ஆதரவாக இல்லாத, உங்கள் ராகங்களை இசைப்பவராக இல்லாமல் உண்மையான பத்திரிகையாளர்கள் நம்மிடம் இருக்கட்டும்.

அனைவருக்குமான வளர்ச்சி என்கிறீர்கள், ராம ஜென்ம பூமி என்கிறீர்கள் அப்படியிருந்தும் நம்மை விட்டு ஏன் பலரும் விலக வேண்டும்? புத்தாண்டிலாவது நாம் தூய்மையாக வருவோம், தைரியம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு நாடகத்தன்மையை கைவிடுவோம்.

உங்களுடைய சக தோழர், நண்பர், சகோதரர் என்ற முறையில் சிந்தனைக்கான இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. ஆனால் நீங்கள் இதனை ஏற்கவில்லை எனில் நம்மைக் கடவுள் காப்பாற்றட்டும். தேர்தல்கள் நெருங்குகிறது சார். வாழ்க ஜனநாயகம்” என்று கூறியுள்ளார் சத்ருகன் சின்ஹா.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close