[X] Close

ஜெய் ஜவான் ஜெய் கிஷானுடன் ஆராய்ச்சிக்காக ‘ஜெய் அனுசந்தன்’- அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்


modi-speech

மக்களவை தேர்தலை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் சிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், பாஜக மாநிலத் தலைவர் ஸ்வாதி மாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 04 Jan, 2019 09:20 am
  • அ+ அ-

‘‘ஜெய் ஜவான் ஜெய் கிஷான், ஜெய் விக்யான் முழக்கத்துடன், ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) என்ற முழக்கத்தை பிரதமர் மோடி புதிதாக சேர்த்து பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 106-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்த நாட்டின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு விஞ்ஞானிகளின் வாழ்க்கையும் அவர்களது பணிகளும் சாட்சி களாக விளங்குகின்றன. இந்தச் சூழ்நிலையில், ‘ஜெய் ஜவான் ஜெய் கிஷான்’, ‘ஜெய் விக்யான்’ முழக்கத்துடன் ‘ஜெய் அனுசந் தன்’ (ஆராய்ச்சி) என்பதையும் சேர்க்க விரும்புகிறேன்.

அறிவியல் மூலமாகத்தான் இந்தியா தற்போதுள்ள முன்னேற்ற நிலையை எட்டி உள்ளது. இந்தியா வின் எதிர்காலத்தை பாதுகாப்பதும் அறிவியல் மூலமாகவே சாத்தியப் படும். கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அறிவியலில் நல்ல ஆண்டாக அமைந்தது. விமானங் களுக்குப் பயன்படும் பயோ எரிபொருள், பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக ‘திவ்ய நயன்’ கருவி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய், டெங்கு மற்றும் நிலச்சரிவை எச்சரிக் கும் செலவு குறைந்த கருவிகள் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந் துள்ளோம்.

தேசிய ஆய்வகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎஸ்சி, டிஐஎப்ஆர் மற்றும் ஐஐஎஸ்இஆர் போன்ற அமைப்பு கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட் டுக்கு மிகப்பெரிய பலமாக உள் ளன. எனினும் 95 சதவீத மாணவர் கள் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல் கின்றனர். இந்த பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் வலுவான ஆராய்ச்சிகள் மேற் கொள்வதற்கான சூழலை நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.

எனவே, மாநில பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்து வது தொடர்பாக ஆலோசனை நடத்தி செயல் திட்டம் உருவாக்க, ‘அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கவுன் சிலை’ கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான் ஜெய் கிஷான்’ என்ற முழக்கத்தை வெளியிட்டார். அதன்பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ‘ஜெய் விக்யான்’ என்ற முழக்கத்தை வெளியிட்டார். தற்போது அறிவியல் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அவற்றுடன் ‘ஜெய் அனுசந்தன்’ என்ற முழக்கத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close