[X] Close

மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்!-  காங்கிரஸ் தலைவர் கண்டனம்


trumps-words-describing-pm-unacceptable-ahmed-patel

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jan, 2019 15:38 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன் என்று பிரதமர் மோடியை கிண்டலடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கண்டித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் அகம்து படேல்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக் கொடுத்த நூலகம் யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறது என்று பிரதமர் மோடியைக் கிண்டல் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்நிலையில் இது குறித்து அகமது படேல், "இந்தியப் பிரதமரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ள விதமும் தொணியும்  ஏற்புடையதும் அல்ல. இந்த விஷயத்தில் இந்திய அரசு உடனே தகுந்த பதிலடி கொடுக்கும் என நம்புகிறேன். 
2004-ல் இருந்து ஆப்கானிஸ்தானில் சாலைப் பணிகள் , அணை கட்டும் பணிகள் என 3 பில்லியன் டாலர் அளவில் இந்தியா உதவிகள் செய்திருக்கிறது என்பதை யாராவது ட்ரம்புக்கு தெரியப்படுத்துங்கள்" எனக் கூறியிருக்கிறார்.

ட்ரம்ப் பேசியது என்ன?
"ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ ஏராளமான பணிகளை அமெரிக்கா செய்துள்ளது, அந்நாட்டு மக்களுக்காக ஏராளமான முதலீடுகளையும் செய்துள்ளது.

ஆனால், இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி என்னிடம், ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அந்த நூலகம் எங்கே இருக்கிறது?. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன். அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்போமா.

பிரதமர் மோடி அவ்வாறு கூறியதற்கு, ஓ அப்படியா நூலகம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டேன். ஆப்கானிஸ்தானில்  நீங்கள் (பிரதமர் மோடி) அமைத்துக் கொடுத்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது"

இவ்வாறு ட்ரம்ப் செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close