[X] Close

அதிகாரி சொற்படி நடக்காத ஊழியர்கள் நீக்கப்படுவர்!- ம.பி. அமைச்சர் அதிர்ச்சிப் பேச்சு


those-who-don-t-obey-seniors-will-be-kicked-out-madhya-pradesh-minister

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jan, 2019 15:24 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோது உயரதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடக்காத ஊழியர்கள்  நீக்கப்படுவார்கள் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில், தொண்டர்களுடனான கலந்துரையாடலில் அவர்களை அதிர்ச்சியடைய வைக்கும் விதத்தில் அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தொழிலாளர் துறை அமைச்சரான மஹேந்திர சிங் சிசோதியா, "உயரதிகாரிகளின் சொற்படி நடக்காத அவர்களுடன் ஒத்துழைக்காத ஊழியர்கள் வெளியேற்றப்படுவாரள் " எனப் பேசியுள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சரே இப்படிப் பேசியிருப்பதால் சர்ச்சை நீண்டு வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close